கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், நவராத்திரி விழாவின் நிறைவாக விஜயதசமி விழா நடந்தது.
வாலை சக்தி அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகத்துடன், தொடர்ந்து பல்வேறு அவதாரங்களில் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு விசேஷ, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பரிவார தெய்வங்களான கன்னி அம்மன், காளிங்க நர்த்தன கிருஷ்ணன், போகர், தியான ஆஞ்சநேயர், கோட்சார நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.