Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கிறது ஒரு மருந்து! காசியாத்திரை செல்வது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உங்களைப் போலவே உங்கள் பிள்ளை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2016
12:10

குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்றால், பெற்றவர்களைப் போலவே தான் வளருகிறார்கள். ஒரு போதகரின் வீட்டிற்கு ஒரு நாய் வந்தது. அதற்கு உணவளித்து பாதுகாத்தார் போதகர். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களிடமும் அன்பாக பழகியது அந்தநாய். ஒருநாள், பேப்பரில் காணாமல் போன தன் நாயைப் பற்றி விளம்பரம் செய்திருந்தார் ஒருவர். அந்த விளம்பரத்திலுள்ள வாசகங்கள் இந்த நாயை ஒத்திருந்தன. குறிப்பாக, கருப்பு நிறமுடைய அந்த நாயின் வாலில் மட்டும் நான்கே நான்கு வெள்ளை முடிகள் இருக்கும் என்ற அடையாளமே அது. இதைப்படித்த போதகர், நாயின் சொந்தக்காரர் மீண்டும் அதை எப்படியோ தேடிப்பிடித்து விடுவார் எனக்கருதி, வெள்ளை முடிகளை மட்டும் கத்தரித்து விடும்படி தன் பிள்ளைகளிடம் சொன்னார். அதாவது, ‘நாயை உரியவரிடம் சேர்க்க வேண்டும், அடுத்தவர் பொருள் நமக்கு ஆகாது’ என்ற அறிவுரையை பிள்ளைகளுக்கு சொல்லியிருந்தால், அவர்கள் அதன்படி நடந்திருப்பார்கள். இவர் தவறான நடைமுறையைப் போதித்தார். ஒருவழியாக, நாயின் சொந்தக்காரர் நாயைக் கண்டுபிடித்து, இவர்களிடம் திருப்பித் தருமாறு கேட்டார். ‘நாய்க்கு வெள்ளை முடிகள் இருப்பதாக விளம்பரத்தில் உள்ளது. இந்த நாய்க்கோ அப்படி இல்லை. எனவே, இது உங்கள் நாய் இல்லை’ என அடித்துச் சொல்லி விட்டார் போதகர். சொந்தக்காரர் வருத்தத்துடன் போய் விட்டார். இதன்பிறகு, அந்த பிள்ளைகள் தந்தையின் போதனைப்படி, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருட ஆரம்பித்தனர். கர்த்தரின் ஆசிர்வாதம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கர்த்தர் சொன்னவைக்கு மாறாக நடந்து, தன் தந்தைக்கு கெட்ட பெயரை உண்டாக்கினர். பலமுறை ஜெயில் சென்றதால், போதகரை யாரும் மதிக்கவில்லை. பைபிளில், ‘பிதாக்களே! நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமலும், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக!’ என்ற வசனம் இருக்கிறது.இதை போதகர் பின்பற்றியிருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா?  குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுத்தால், அவர்கள் பயனுள்ள கனிகளைத் தரும் மரமாய் திகழ்வார்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar