பதிவு செய்த நாள்
18
அக்
2016
12:10
குடகு: காவிரி நதி உற்பத்தியாகும், தலக்காவிரி தீர்த்த உற்சவத்தில், காவிரி அன்னைக்கு நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குடகு மாவட்டம், காவிரி நதி உற்பத்தியாகும் தலை காவிரியில் நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது. குடகு மக்களின் நம்பிக்கைப்படி காவிரி உதயமான நாளை, உத்தரி திருவிழா என்று அழைக்கின்றனர். இவ்விழாவுக்கு கர்நாடகாவிலிருந்து மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தமிழகத்திலிருந்தும் பக்தர்கள் திரளாக வருவர். நேற்று காலை, 6:29 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தில் பல கோவில்களிலிருந்து வந்திருந்த, 15 அர்ச்சகர்கள் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை செய்தனர்.திருவிழாவை மாநில அரசு நடத்துவதால், குடகு மாவட்ட எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் தலைவர்கள் உட்பட, பலரும் கலந்து கொண்டனர். தலக்காவிரியில் நீராடினால் ஆண்டு முழுவதும் எந்த நோயும் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கூட்டம் நேற்று குறைவாகவே காணப்பட்டது. வழக்கமாக பெங்களூரு, மைசூரு, மங்களுரு, ஹூப்பள்ளி, ஷிவமொகா உட்பட பல நகரங்களிலும் இருந்து சிறப்பு பஸ்களை கே.எஸ் ஆர்.டி.சி., இயக்குவது வழக்கம்.இந்த ஆண்டு, பஸ்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பூஜையில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி., ரம்யா பங்கேற்று, காவிரி அன்னையை தரிசித்தார். தலக்காவிரியில் காவிரி அன்னை பூஜையில் கலந்து கொள்வது இது தான் முதன்முறை. மாண்டியா மக்களின் காவல் தெய்வமான இந்த இடத்தை தரிசிப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. இங்கு காவிரி தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றும்போது பரவசமாக உள்ளது.ரம்யா, முன்னாள் காங்., - எம்.பி., மாண்டியா