சரவணப் பொய்கையை நாறடிக்கும் 19 ஆயிரம் பேர்: ஆய்வில் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2016 11:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையை தினமும் 19 ஆயிரம் பேர் பயன்படுத்தி நாறடிக்கின்றனர் என கல்லுாரி மாணவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே நிரம்பும். தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லை. இதன் புனிதம் காக்க அரசு துறைகள், பொது மக்கள் அடங்கிய விழிப்புணர்வு குழு அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். சரவணப் பொய்கையை பயன்படுத்துபவர்கள் விபரம், எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து கொடுக்குமாறு மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நிர்வாகத்திற்கு கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை வேண்டுகோள் விடுத்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சுரேஷ்பாபு, ஜெயபாலகிருஷ்ணன் தலைமையில், மாணவர்கள் கோபிநாத், முரளிதரன், பாலமுருகன் உட்பட 12 பேர் அக்.,15,16ல் கணக்கெடுத்தனர். 8,690 பேர் குளிக்கவும், 6,070 பேர் துணி துவைக்கவும், 4,415 பேர் பொய்கையை சுற்றி திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதும் தெரிந்தது. இதன் அறிக்கை செல்லத்துரையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.