பதிவு செய்த நாள்
19
அக்
2016
11:10
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. கோயில் திருப்பணி, 2013 ஆகஸ்டில் ஸ்ரீலலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. பிரகார மண்டபம், கொடிமரம், ராஜகோபுரம்,அன்னதான மண்டபம், மூலஸ்தான விமான பணி, கொடிமரத்துக்கு தங்க ரேக்,கதவுகளுக்கு வெள்ளி தகடு பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.2.8 கோடியில் நடந்தது.
பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் கடந்த 14-ம் தேதி கும்பாபிஷேக பணி தொடங்கியது. நேற்று முன்தினம் முதற்கால யாக பூஜை, நேற்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை, மாலை 6:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள், இரவு 8:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.இன்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், 8:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடு, 10 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை 5:30 மணிக்கு மகாபிஷேகம், இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. காரைக்குடி போக்குவரத்து கழகம் சார்பில் சுற்று வட்டார பகுதிகள், சிவகங்கை, அறந்தாங்கி பகுதியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில், செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர், மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை தலைவர் எம்.அருணாசலம், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன், துணை தலைவர்கள் எஸ்.எல்.என்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.கலை செல்வன், துணை செயலாளர்கள் கே.ஆர்.கருப்பையா, எஸ்.கே.எம்.பெரிய கருப்பன், டிரஸ்டிகள் எஸ்.சுப்பிரமணியன், என்.என்.எல்.நாச்சியப்பன், என்.ரவிசர்மா, ஜி.ரத்தினம், வி.ஆர்.சண்முகநாதன், கணக்கர் அழகுபாண்டி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.