சரவணபவ என்பது சடாட்சரம். ஒரே அட்சரம் இருமுறை வரக்கூடாது என்பது ஒரு தத்துவம் ஆக சரஹணபவ என்றும் கூறுவர். (பராசக்தியின் பஞ்சதசாக்ஷரியில் அட்சரங்கள் திரும்பவருகின்றன.)
நம: சிவாய என்பது சிவ பஞ்சாட்சரம், ஓம் நம: சிவாய என்பது குஹ சடாட்சரம். பிரணவ சடாட்சரம் என்றும் கூறுவர். (சிவனும் குஹனும் ஒன்றே.) நம: குமாராய என்பது கந்த சடாட்சரம். நம: குஹாய என்பது குஹ பஞ்சாட்சரம். (மிகமிக மகிமைவாய்ந்த மந்திரம்) ஓம் ஸாம் ஸரவணபக்ஷாய ஸ்வாஹா என்பது குஹ நவாட்சரம். ஓம் நம: கார்த்திகேயாய என்பது அஷ்டாட்சரம்.