மஹாவிஷ்ணுவுக்கு இரு பத்தினிகள் - ஸ்ரீதேவி, பூதேவி சிவனுடன் இரு பெண்கள் - உமை, கங்கை பிரம்மனுடன் இரு பெண்கள் - சரஸ்வதி, சாவித்ரி. கணபதிக்கு இரு மனைவிகள் - சித்தி, புத்தி. சாஸ்தாவுக்கு இரு மனைவிகள் - பூர்ணா, புஷ்களா. ஆக, கந்தனுக்கும் இரு மனைவிகள் - வள்ளி, தேவசேனை. கந்தன் - ஞானசக்தி. தேவசேனை - கிரியா சக்தி வள்ளி - இச்சா சக்தி. வேல் - வீர சக்தி. மயில் - பிரணவ சக்தி. சேவல் - தீர சக்தி. ஆகவேதான் கந்தனின் சஹஸ்ரநாம ஆரம்பம் அசிந்த்ய சக்த்யை நம: என்று தொடங்குகிறது.