பதிவு செய்த நாள்
24
அக்
2016
12:10
ரிஷிவந்தியம்: தமிழக முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி ஆதிதிருவரங்கத்தில் உள்ள பெருமாள் கோவிலில் அ.தி.மு.க., வினர் 3000 பேர் மொட்டையடித்து வழிபாடு செய்தனர். ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள பழமை வாய்ந்த அரங்கநாதர் பெருமாள் கோவிலில் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., பிரபு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெ., பூரண குணமடைந்து மீண்டும் பணியாற்றிட வேண்டி அ.தி.மு.க., வை சேர்ந்த 3000 பேர் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவை செயலாளர் ஞானமூர்த்தி, விவசாய பிரிவு செயலாளர் கதிர்.தண்டபாணி, வழக்கறிஞர் செயலாளர் சீனுவாசன், மாணவரணி செயலாளர் சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, ராஜசேகர், அய்யப்பா, அரசு, பழனி, கோதண்டராமன், பழனியப்பா, செண்பகவேல், குமார், மணிராஜ், ராஜேந்திரன், நகரசெயலாளர்கள் பாபு, சுப்பு, செந்தில், தங்கவேல், ஷியாம்சுந்தர், மகளிரணி செயலாளர் அமுதா, முன்னாள் மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், ஒன்றிய தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், அவைத்தலைவர் அம்சவேல், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசன், ஊராட்சி தலைவர்கள் தேவச்சந்திரன், சின்னராஜ், ஜெயதுரை, பாலமுருகன் நிர்வாகிகள் சண்முகம், ரங்கநாதன், ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி, லஷ்மிகுமார், மணிகண்டன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.