ஒருமுறை நபிகள் நாயகத்தைச் சந்திக்க ஒரு நபர் வந்தார். அவர் நாயகத்திடம், “எனக்கு இறுதிக்காலம் எப்போது வரும்?” எனக் கேட்டார். “அது வருவது இருக்கட்டும். அதற்காக நீர் என்ன செய்து வைத்துள்ளீர்?” எனக் கேட்டார் நாயகம்.“நாயகமே! நான் தொழுகை செய்ததில்லை. நோன்பு நோற்றதில்லை. ஜகாத்(தர்மம்) கொடுத்ததில்லை. ஆனால், அல்லாஹ்வை நான் மனமார நேசிக்கிறேன். அவருடைய அருளை வேண்டுகிறேன்,” என்றார். நாயகம் மிகவும் மகிழ்ச்சியுடன், “நீர் எவர்களை நேசிக்கின்றீரோ, அவருடன் கியாமநாளில் இருப்பீர்,” என்றார். தொழுகை, நோன்பு, தர்மம் போன்றவை மிகவும் முக்கியம். ஆனால், தவிர்க்க இயலாத காரணங்களால் இவற்றை செய்ய இயலாவிட்டாலும், இறைவனின் நினைவுடன், அவனது கட்டளைகளை மதித்து, அவனுக்குப் பயந்து செயல்களைச் செய்தாலே அவனை அடைந்து விடலாம்.