குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நங்கவரம் நகர, அ.தி.மு.க., சார்பில், நங்கவரம் சாத்தியம்மன் கோவிலில், நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்றிட வேண்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நகர செயலாளர் திருப்பதி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் வினாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.