Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோவிலில் நடந்த முஸ்லிம் ... பூமீஸ்வரன் கோவில் குளத்தை சீரமைத்த கிராம இளைஞர்கள்! பூமீஸ்வரன் கோவில் குளத்தை சீரமைத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
500 ஆண்டுகள் பழமையான வில்வநாதர் கோயிலில் திருப்பணி!
எழுத்தின் அளவு:
500 ஆண்டுகள் பழமையான வில்வநாதர் கோயிலில் திருப்பணி!

பதிவு செய்த நாள்

26 அக்
2016
12:10

சாயல்குடி: சாயல்குடி அருகே 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வில்வநாதர் கோயிலில் திருப்பணிகள் துவங்கி ஜரூராக நடக்கிறது.சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தில் ஐந்நுாறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் பக்தர்கள் முயற்சியுடன் கருங்கல்லால் ஆன மூலஸ்தான கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம் அமைக்கும் பணிகள் பாலாலயத்துடன் துவங்கி ஜரூராக நடக்கிறது. இதற்காக ஏற்கனவே இருந்த சிவன் கோயில் கருவறை அகற்றப்பட்டு, அதே இடத்தில் ஆகம விதிகள்படி கருங்கல்லால் ஆன கற்பகிரகம் அமைக்கப்படுகிறது. இதற்காக சிற்ப கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி ஸ்தபதி தலைமையில் 15 தொழிலாளர்கள் கலைநயத்துடன் கருங்கல்லில் சிற்பம் வடித்து வருகின்றனர்.

இதுகுறித்து சிவாச்சாரியார் எம்.செந்துாரான் கூறியதாவது: பிரசித்தி பெற்ற வில்வநாதர் கோயிலில் பழமையான ஸ்தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. வயிற்று வலி, குழந்தை பேறு, மனக்குழப்பம் ஆகியவற்றிற்கு பிரசாதமாக விபூதியுடன் வில்வ இலை வழங்கப்படுகிறது. கோயில் குளம் 5 ஏக்கரில் உள்ளது. கரையோரங்களில் மரங்கள் நட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. அவற்றின் நடுவில் அமைக்கப்பட்ட கிணற்றில் சுவையான தண்ணீர் கிடைப்பதால், சுற்றுவட்டார கிராம மக்களின் தாகம் தீர்க்கப்படுகிறது. சிவபெருமான், தவசி தம்பிரான், தவமணி சுவாமி, வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு, முந்தைய காலங்களில் செய்ததை போன்று கருங்கல்லால் கோயில் அமைக்கப்படுகிறது. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 அடி உயரத்தில் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம் அமைக்கப்பட்டு, அதன் மீது ஐந்து நிலை கோபுரம் அமைய உள்ளது. சுற்றுவட்டார கிராமமக்கள், குலதெய்வ குடிமக்களின் பங்களிப்போடு திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar