தீபாவளி விடுமுறை; ஆண்டாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2016 12:10
ஸ்ரீவில்லிபுத்துார்: தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கடந்த 2 நாட்களில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இருநாள் தொடர்விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று முன்தினமும், நேற்று குடும்பத்துடன் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். இதனால் ஆண்டாள்கோயில், பெரியகடை பஜார், பஸ் ஸ்டாண்ட் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயில் மாடவீதிகளைச் சுற்றி கார், வேன்கள் நிறுத்தபட்டிருந்தன. பஜார் வீதிகளில் உள்ள சுவீட் ஸ்டால்களில் பால்கோவா விற்பனை எதிர்பாராத அளவில் நடந்ததாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். ரோட்டோர கடைகளிலும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நன்றாக இருந்ததாக வியாபாரிகள் கூறினர். டவுண் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.