புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி காமாட்சியம்மன் கோவிலில், கேதார கவுரி விரத பூஜை நடந்தது. புன்செய்புளியம்பட்டி காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கேதார கவுரி பூஜை நடப்பது வழக்கம். இதன்படி, கேதார கவுரி பூஜை நேற்று காலை நடந்தது. தொடர்ந்து காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாணமும், மாங்கல்ய பூஜையும் நடந்தது. இதில், 21 நாட்கள் விரதம் இருந்த பெண்கள் பங்கேற்றனர். அம்மன் திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அட்சதை தூவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பூஜை முடிந்த பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.