Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநிகோயிலில் கந்தசஷ்டி விழா ... சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி விழா துவக்கம் சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

31 அக்
2016
05:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கோயிலில் காலை 8.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாக பூஜைகளைத் தொடர்ந்து  மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில்  உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும்,  காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு  காப்பு கட்டப்பட்டு பின்பு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு  சிவாச்சார்யார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் ஆறு நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். உச்சிகால பூஜை முடிந்தபின்பு அவர்களுக்கு தேன்,சர்க்கரை கலந்த தினை மாவும், பாலும் கோயில் சார்பில் வழங்கப்படும்.

சூரசம்ஹாரம்:
தினம் இரவு ஏழு மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பார். தினம் காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கும் சண்முகார்ச்சனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 4ல்  கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல், நவ. 5ல்  சூரசம்ஹாரம், நவ. 6  காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம், மாலை 3 மணிக்கு மூலவர்முன்பு தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை தரிசனம் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar