இதை யோகபீடம் என்றும் சொல்வர். ஆதிசக்தியானவள் பிரம்மா, திருமால், ருத்ரன் ஆகியோரை முத்தொழில் புரியும்பொருட்டு தோற்றுவித்த தலம் என்பர். கராங்குனி நத உத்பன்ன நாராயண தசாக்ருதி என்கிறது லலிதா சகஸ்ரநாமம். அதாவது இந்த அன்னையின் பத்து விரல்களிலிருந்து மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் வெளிப்பட்டன என்கிறது. மகிஷாசுரனை அழிக்க பிரம்மா, திருமால், சிவன் ஆகியோரின் சக்திகள் ஒன்றிணைந்த தேவியே பராசக்தி. குற்றாலம் உறையும் தேவியைப் பணிந்தால் குற்றங்களை மன்னித்து அருள்மழையை அருவியாகப் பொழிவாள்.