ஆதிசங்கரர் ஸ்தாபித்த அம்பிகை என்பர். அன்னை வடிவுடை நாயகியின் எழில் பிரம்மிக்க வைக்கும். இங்குள்ள வட்டப்பாறை அம்மன் உக்கிரமாக இருந்ததால், சங்கரர் ஸ்ரீசக்கரம் பதித்து சினம் தணித்தார் என்பர். சுந்தரரின் திருமணத்தின் பொருட்டு, சிவபெருமான் சாட்சி சொல்ல மகிழமரத்தின்கீழ் தோன்றியதாக வரலாறு. பட்டினத்தார் இங்குள்ள கடற்கரையருகே சமாதி கொண்டார். தியாகராஜர் இத்தலத்தை தரிசித்துப் பாடியுள்ளார். ராமலிங்க சுவாமிகளுக்கு இத்தல அன்னை, அண்ணியார் வடிவில் வந்து அமுதளித்தாள்.