பஞ்சபூதத் தலங்களில் இது மண் தலம். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பர். சங்கீத மும்மணிகள் பிறந்த ஊர். இங்குள்ள தேவி கமலாம்பாள் வினோத தவக்கோலத்தில் தனிக்கோயிலில் வீற்றுள்ளாள். முத்துசுவாமி தீட்சிதர் இந்த தேவிமீது நவாவரணம் பாடியுள்ளார். இந்திரன் வழங்க, முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜரை ஸ்தாபித்தார். திருவாரூர் தேர் அழகு. உற்சவம் உன்னதமானது. சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரர் திருத்தொண்டர்தொகையை இங்கேதான் பாடினார். நடராஜர் அஜபா நடனம் ஆடிய தலம்.