மந்திரசக்தி பீடம் என்றும் சொல்லப்படும். அமிர்தகுடம் ஒதுங்கியதால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடக்கும் தலம். இத்தல ஈசனையும் தேவியையும் வணங்கினால் ஆனந்தமாக வாழலாம். தேவி விஷ்ணுவைப்போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களங்கள் பொழிகிறாள். மனனாத் த்ராயதே இதி மந்த்ர - மனதில் தியானித்தால் காப்பாற்றுவதே மந்திரம். இங்குள்ள மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். வேண்டியதெல்லாம் அருள்வாள்.