இது சதிதேவியின் தொப்புள் விழுந்த இடம் என்பர். ஏழு மோட்சபுரிகளுள், தென்னிந்தியாவில் உள்ள ஒரே தலம் காஞ்சிதான். பஞ்சபூத தலங்களில் மண் தலம். இங்குள்ள அனைத்து சிவன்கோயில்களுக்கும் ஒரு அம்பிகைதான். கிருதயுகத்தில் துர்வாச முனிவர் 2,000 துதிகளாலும், திரதாயுகத்தில் பரசுராமர் 1,500 துதிகளாலும், துவாபரயுகத்தில் தௌம்ய முனிவர் 1,000 துதிகளாலும், கலியுகத்தில் மூக கவி 500 துதிகளாலும் (மூ பஞ்ச சதி)அம்பிகையைப் போற்றியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கே வந்தபோது அன்னை உக்ரமாக இருக்கவே, எதிரே சக்கர யந்திரம் பதித்தார். அங்கே காமகோடி மடத்தையும் ஸ்தாபித்து பிலத்தில் (சுரங்கத்தில்) மறைந்தார். ஐப்பசி மாத பூர நட்சத்திரம் தேவி உத்பவமான தினம். அன்று அன்னைக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். கண்ணாடிமூலம் சங்கரர் மறைந்த சுரங்கத்தையும் காணலாம்.