தேவியின் நிழல் விழுந்த இடம் என்பதால் சாயா பீடம் எனப்படுகிறது. லலிதா சகஸ்ர நாமத்திற்கு உரை செய்த பாஸ்கர ராயர் பளிங்குக் கல்லால் தேவியை ஸ்தாபித்தாராம். ஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை போதித்தார். அவர் செய்த ஸ்ரீசக்கரம் இங்குள்ளது. அகத்தியர் ஈ வடிவில் வந்து தேவியை வழிபட்டதால் ஈங்கோய்மலை எனப்படுகிறது. மகிளாசமாஜத்தைச் சேர்ந்த, மாதுளம்பூ நிற ஆடை அணிந்த கன்னியர்கள் ஸ்ரீவித்யா தீட்சை பெற்று, லலிதாம்பிகைக்கு அபிஷேக ஆராதனை செய்வது அதிசயம். வாயுவுக்கும் மேரு மலைக்கும் நிகழ்ந்த போரில், வாயு மேருமலையை மூன்றாக வெட்டி எறிந்தார். ஒன்று, இலங்கையிலுள்ள திரிகூடமலை. இரண்டாவது ரத்னமலை. மூன்றாவது இந்த ஈங்கோய்மலை. முதலில் மரகத மலையாக இருந்து இப்போது கல்மலையாக விளங்குகிறது. இங்குள்ள ஈசன் மரகதேஸ்வரர் மரகதக் கல்லால் ஆனவர். திருச்சி - சேலம் சாலையில் 42 கிலோமீட்டர் தொலைவில் ஈங்கோய்மலை உள்ளது.