கணபதி அருளால், முத்கல மகரிஷி விநாயக புராணம் எழுதிய தலம். புதன் வழிபட்ட தலம். ஆதி சிதம்பரம் என்று போற்றப்படும் இங்கே அகோர வீரபத்திரரும் காளியும் எதிரெதிரே விளங்குகின்றனர். கயாவில் விஷ்ணுபாதம் உள்ளதுபோல இங்கே ருத்ரபாதம் உள்ளது. எனவே பித்ருக்கடன் செய்ய ஏற்ற தலம். இங்குள்ள பிரம்மவித்யா தேவியை வழிபட்டு வித்தைகளில் சிறக்கலாம். ஸ்ரீவித்யா உபாசகர்கள் அன்புடன் வணங்கும் தேவி.