பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரே தலம். இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சீதை மணலால் வடித்த லிங்கத்தை ராமபிரான் பூஜை செய்த தலம். ஆதிசங்கரர் கயிலையிலிருந்து கொண்டுவந்து ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் காலையில் கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பித்ருக்கடன் செய்ய மிக முக்கியமான தலம். சார்தாம் எனப்படும் நான்கு முக்கிய தலங்களுள் ஒன்று. (மற்றவை: துவாரகா, பத்ரி, பூரி). ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மையின் பாதங்களில் சக்கரம் மிளர்கிறது.