Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் தினம் ... முருகா... இதென்ன சோதனை குன்றத்தில் பக்தர்கள் அவதி! முருகா... இதென்ன சோதனை குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் ஜெயந்திரர் உலா!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் ஜெயந்திரர் உலா!

பதிவு செய்த நாள்

02 நவ
2016
10:11

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு சூரசம்ஹார விழா சிறப்பாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள தமிழகம், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். சூரசம்ஹார விழாவில் ஆரம்ப நிகழச்சியான யாகசாலை பூஜை நேற்று முன் தினம் துவங்கியது.

இரண்டாம் நாளான நேற்று அதிகாலை மூன்று மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 3.30 க்கு விஸ்வரூபம்,4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம், தீபாரதனை நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வாணையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். பின் யாகசாலை பூஜை நடந்தது. மூலவருக்கு காலை 9 மணிக்கு உச்சிகால அபிேஷகம் நடந்தது. பின் யாகசாலையில் பூர்ணாகுதியுடன், மகா தீபாரதனை நடந்தது.

ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பின் மாலை 4.30 மணிக்கு சஷ்டி விரத மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, அங்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பின் தங்க தேரில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, கிரி வலப்பாதை வலம் வந்து, இரவு 8 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவ., 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar