முருகா... இதென்ன சோதனை குன்றத்தில் பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2016 10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் பெண் பக்தர்கள் காப்பு கட்டி கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்கின்றனர். விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளில் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் செல்வர். சமீபத்தில் இந்த பொய்கையில் மீன்கள் இறந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இருந்தும் பக்தர்கள் வேறு வழியின்றி இங்கு நீராடுகின்றனர். கோயில் வளாக கழிப்பறை, சரவணப்பொய்கை கழிப்பறைகள் மட்டுமே பக்தர்கள் இலவசமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் சிரமம் அடைகின்றனர். பகலில் கிரிவல பாதையிலும், இரவில் கோயில் அருகேயும் நடமாடும் கழிப்பறை வாகனங்களும் நிறத்தப்பட்டால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். கிரிவல பாதை ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்களும், ரோடு மிக மோசமாகவும் உள்ளதால் பக்தர்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.