பதிவு செய்த நாள்
02
நவ
2016
11:11
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, ஆரணியில், நாளை, 18ம் ஆண்டு, நாகசதுர்த்தி விழா நடைபெற உள்ளது. ஆரணி, பிஞ்சலார் தெருவில் உள்ள நாகாத்தம்மன் கோவில். இக்கோவிலில், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில், அதிகளவு பக்தர்கள் சென்று அம்மனை வழிபடுவர். இக்கோவிலில், நாளை, 18ம் ஆண்டு, நாகசதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம், மதியம், 12:00 மணிக்கு அன்னதானம்
வழங்கப்படும். மாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்படும். இரவு, 8:00 மணிக்கு, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.