Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாதவூரில் நவராத்திரி விழா வளர்பிறை சஷ்டி அபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: வரும் 6ம் தேதி மகிஷாசூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2011
12:10

உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் அக்.6ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்துவருகின்றனர். குலசேகரன்பட்டணத் தில் அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோயில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும். இங்கு 10 நாள் கொண்டாடும் தசரா திருவிழா மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தப்படியாக புகழ் பெற்றது. இச்சிறப்புமிக்க தச ரா திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோல õகலமாக துவங்கியது. 26ம் தேதி மாலை 5 மணிக்கு காளி பூஜையும், மாலை 6 மணிக்கு காளிபக்தர்கள் குழு சார்பில் அன்னதானம், இரவு 9 மணி க்கு அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நட ந்தது. கடந்த 27ம் தேதி காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலாவும், காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 8 மணிக்கு கொடியேற்றம் கோல õகல மாக நடந்தது.

கொடியேற்றம் முடிந்தவுடன் கோயில் பூசாரி பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் பல்வேறு வேட ங்கள் அணிந்து காணிக்கை பிரித்துவருகி ன்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்÷ வலி, மற்றும் தூத்துக்குடி மா வட்டத்தில் அனைத்து இட ங்களிலும் முத்தாரம்மன் பக் தர்கள் விரதமிருந்து பல்÷ வறு வேடமணிந்து காணிக்கை பிரித்து வருகின் றனர். கடந்த 28ம் தேதி முதல் ஒன்பதாம் நாள் வரும் 5ம் தேதி வரை தினசரி காலை 6, 7, 10.30 மணி, பகல் 1 மணி, மாலை 3.30மணி, மாலை 6.30 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், தினசரி இரவு 9 மணிக்கு விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், மகிஷா சூரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் என ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 10ம் திருநாள் வரும் 6ம் தேதி காலை 6 மணி, காலை 8 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு 11மணிக்கு சிறப்பு அலங்கார பூø ஜயும், இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோ யில் அருகே எழுந்தருளி மகி ஷா சூரம்சம்ஹாரம் நடக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிவார்கள். இரவு 1 மணிக்கு சிறப்பு வாண வேடிக்கை நிகழ்ச்சியும், பதினோராம் நாள் 7ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மே டைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலில் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனிவந்து தேர்நிலையம் அடைதலும், அதிகாலை 5 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படுதலும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5.30மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தலும், மாலை 6 மணிக்கு காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். இரவு 12 மணிக்கு சேர் க்கை அபிஷேகம் நடக்கிறது. பனிரெண்டாம் திருநாள் 8ம் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10மணிக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு முன்னாள் அறங்காவலர் தாண்டவன்காடு கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar