Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ... சூரனை வதம் செய்ய வேல் பெற்ற குன்றம்முருகன் நவ.,5ல் சூரசம்ஹாரம் சூரனை வதம் செய்ய வேல் பெற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கலில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி: சுவாமிக்கு வியர்த்ததால் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சிக்கலில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி: சுவாமிக்கு வியர்த்ததால் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 நவ
2016
11:11

நாகப்பட்டினம்: சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, அன்னையிடம் சக்திவேல் வாங்கும்போது, சிக்கல் சிங்காரவேலவரின் மேனியெங்கும் வியர்க்கும் அதிசயத்தை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.

நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில்தான், தன் அன்னையிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது. இக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாளான நவ.,4 காலை, சிங்காரவேலவர் தேவியர்களுடன் திருத்தேரில் வீதியுலா வந்தார். இதை தொடர்ந்து, திருச்செந்துாரில் இன்று சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, திருத்தேரிலிருந்து முருகப்பெருமான் கோவிலுக்குள் வந்து, அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நவ.,4 இரவு நடந்தது.

அன்னையிடம் சக்தி வேல் பெற்று, தன் சன்னிதியில் அமர்ந்த உற்சவரான முருகப்பெருமானுக்கு, மனிதர்களுக்கு வியர்ப்பது போன்று, திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், சன்னிதி சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இரவு, 12:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar