Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கலில் சக்திவேல் வாங்கும் ... மூல நட்சத்திரத்தை முன்னிட்டு பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் பால் அபிஷேகம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரனை வதம் செய்ய வேல் பெற்ற குன்றம்முருகன் நவ.,5ல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
சூரனை வதம் செய்ய வேல் பெற்ற குன்றம்முருகன் நவ.,5ல் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

05 நவ
2016
11:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் (நவ., 5) மாலை 6:00 முதல் 6.30 மணிக்குள் நடக்கும் சூரசம்ஹார லீலைக்காக நவ.,4 கோவர்த்தனாம்பிகையிடம் முருகன் வேல் பெற்றார். கோயிலில் நவ.,4  மாலை சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி, கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜைகள் நடந்தன.

திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் இருந்த நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று, கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சுவாமியின் கரத்தில் சேர்ப்பித்தார். சுவாமிக்கு தீபாராதனைகள் முடிந்து, பூ சப்பரத்தில் எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் சென்று அருள்பாலித்தார். நவ.,5 மாலை 5:00 மணிக்கு சுவாமி, சம்ஹார அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் வீதி உலா வருவர்.

அப்போது சூரபத்மனை எட்டு திக்குகளிலும் சுவாமி விரட்டிச்சென்று, சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன், சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இரவு சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம் முடிந்து மாலை மாற்றி தீபாராதனை நடக்கும்.

மாவிளக்கு விரதம்: கந்த சஷ்டி ஆறுநாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள் நவ., 6 விரதத்தை முடித்துக் கொள்வர். அதற்கு முன்னதாக, திருவிழாவின் ஐந்தாம் நாளான நவ.,5, மாவு விரதம் மேற்கொள்வர். இதற்காக நவ.,4 மாவிளக்கிற்காக பச்சரிசியில் மாவு இடித்து, அதில் வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து மாவு தயார் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar