ராஜராஜ சோழன் சதயவிழா : நவ.,9 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2016 02:11
தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சதய விழாவை
முன்னிட்டு நவம்பர் 9 ம் தேதி தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ
சோழனின் 1037 வது சதய விழா நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்பட
உள்ளது. இதனை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதி தஞ்சையில் உள்ளூர் விடுமுறை
விடப்படுகிறது. அதற்கு பதிலாக டிசம்பர் 10 ம் தேதி வேலை நாளாக பள்ளி,
கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.