பதிவு செய்த நாள்
07
நவ
2016
12:11
ஈரோடு: பெருந்துறை அருகே கொம்மக்கோவில், மாதேசுவரன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 11ல் நடக்கிறது. விழாவையொட்டி, 10ம் தேதி தீர்த்தம் எடுத்து வருதல், விமான கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம், திருவிளக்கு வழிபாடு, வேள்வி, விமான கலசம் நிறுவுதல், யாக வேள்வி நடக்கிறது. மறுநாள் காலை, 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தமிழ் முறைப்படி விழா நடப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கொம்மக்கோவில், பொறையாக்கவுண்டன் வலசு, உருமாண்டாம்பாளையம், கூனம்பட்டி, நல்லமுத்தாம்பாளையம் பகுதி மக்கள் செய்துள்ளனர்.