திருவள்ளூர்: திருவள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், வாரம்தோறும் தொடர் யாகம் இன்று துவங்குகிறது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பிரம்மாண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர் யாகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இந்த யாகத்தால் அவற்றில் பங்கேற்போரும், தொடர்ந்து மழை பெய்யவும் இந்த யாகம் நடத்தப்பட உள்ளது. இந்த யாகம், இன்று காலை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் துவங்குகிறது.