பதிவு செய்த நாள்
07
நவ
2016
02:11
குன்னுார் : குன்னுார் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம் ஹார நிகழ்ச்சி நடந்தது. குன்னுார் வி.பி., தெருவில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நடந்து வந்தது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தன. நேற்றுமுன்தினம் மாலை, சூரசம்ஹார நிகழ்ச்சி, கோவில் வளாகம், துருவம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணாபுரம், வி.பி., தெரு என, ஆறு இடங்களில் நடந்தது. பக்தர்கள், திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர் வாகத்தினர் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டனர். ஊட்டி மாரியம்மன் கோவில், எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், லோயர்பஜார் சுப்ரமணியர் கோவில், காந்தல் காசிவிஸ்வநாதர் கோவில், எம்.பாலாடா ஆனந்தமலை முருகன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.