திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2016 11:11
துாத்துக்குடி : திருச்செந்துார் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் முருகன் கோயிலிலில் கந்த சஷ்டி விழா அக்.,31 ல் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி தங்க சப்பரம், தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஆறாம் நாளில் கடற்கரை மைதானத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி பத்மசூரனை வதம் செய்தார். பின் சாந்தோச மண்டபத்தில் எழுந்தருளினார். திருக்கல்யாணம்: ஏழாம் நாளான நவ.,5 இரவு 3:00 மணிக்கு நடை திறப்பு, மற்ற கால வேளை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. நவ.,6 அதிகாலை 5:00 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பட்டார். உச்சிகால அபிேஷகத்திற்கு பின் முருகா மடத்தில்அம்மனுக்கு குமர விடங்க பெருமான் காட்சி தந்தார். இரவு 9:00 மணிக்கு குமரவிடங்க பெருமானுக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு ஒரு மணிக்கு திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. திருமண விருந்தாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.