பதிவு செய்த நாள்
08
நவ
2016
12:11
வெண்ணைமலை: வெண்ணைமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக, சங்காபிஷேகம் நடந்தது. கரூர் அடுத்த வெண்ணைமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா முன்னிட்டு, சூரசம்ஹாரம், சுவாமி திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான நேற்று காலை, 8:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை சங்காபிஷேகம் நடந்து. இதில், சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சுவாமி முன் வைத்து, பூஜைகள் நடந்தன. கோவில் சிவாச்சாரியார்கள் சிவராஜ் குருக்கள், பாஸ்கர குருக்கள் தலைமையில் யாகங்களை நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.