விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கந்த சஷ்டியை முன்னிட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்து, வேள்விகள் நடந்தது. இரவு 8.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் மகா தீப ஆராதனை நடந்தது. உற்சவத்தை சின்னதச்சூர் சங்கர் குருக்கள் செய்தார். விழா ஏற்பாடுகளை உஷா ரவிச்சந்திரன், புஷ்பா சிவஞானம், சித்ரா ரமணன் மற்றும் பெண்கள் குழுவினர் செய்திருந்தனர். கோவில் தர்மகர்த்தா சுப்புராயலு, நிர்வாகிகள் செல்வகுமார், குமாரசாமி, பாபு, ரமேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.