சிவனுக்கு இன்று சனி பிரதோஷம் நாளை மறுநாள் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2016 12:11
ஊத்துக்கோட்டை: சிவன் கோவில்களில் இன்று, சனி பிரதோஷ விழா நடைபெற உள்ள நிலையில், நாளை மறுதினம், அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் இன்று சனி பிரதோஷ விழா நடைபெற உள்ளது. மாலை, 3:30 மணிக்கு சிவபெருமான், நந்தி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதேபோல், நாளை மறுநாள், ஐப்பசி மாத பவுர்ணமி நாளை ஒட்டி, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல சிவன் கோவில்களிலும் சனி பிரதோஷம் இன்று நடக்கிறது.