கூடலுார், கூடலுாரில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். நுாற்றுக்கணக்கானோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து கலைநிகழ்ச்சி நடத்திய படி வாகனங்களில் ஊர்வலம் வந் தனர். கரகாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஒக்கலிகர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.