பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
ஆத்தூர்: ஆத்தூரில், தாய் கருமாரியம்மன் கோவிலில், நேற்று, அலகு குத்தும் விழா நடந்தது. ஆத்தூர், அம்பேத்கர் நகரில், பழமையான தாய் கருமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 6ல், சக்தி அழைத்தலுடன் துவங்கியது. வரும், 14 வரை, விழா நடக்கிறது. அதில், நேற்று மதியம், 2:00 மணியளவில், 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், தீச்சட்டி எடுத்துவந்தும், அலகு குத்தியும், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபாடு செய்தனர். இன்று மதியம், 3:00 மணியளவில், தாய் கருமாரியம்மன் தேர் திருவிழா நடக்கிறது.