பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
நெய்வேலி: என்.எல்.சி., சார்பில், திருப்பதி உள்ளிட்ட நான்கு கோவில்களுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனம் வழங்கப்பட உள்ளது என, அந்த நிறுவனத்தின் மனிதவளத்துறை செயல் இயக்குனர் தெரிவித்தார். கடலுார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், என்.எல்.சி., கல்வித்துறை சார்பில், கடந்த ௧௦ நாட்களாக துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, நெய்வேலி நகரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை, மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் ஸ்ரீதர் முன்னிலையில், என்.எல்.சி., மனிதவளத்துறை செயல் இயக்குனர் முத்து துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், போக்குவரத்து காரணமாக ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்திடும் வகையில், என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, நாட்டின் புகழ்பெற்ற ஆன்மிக தலங்களான, மதுரை மீனாட்சி அம்மன், சிதம்பரம் நடராஜர், திருப்பதி ஏழுமலையான் மற்றும் பூரி ஜெகன்நாதர் ஆகிய நான்கு கோவில்களில் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.என்.எல்.சி., பொது மருத்துவமனைக்கும் பேட்டரியில் இயங்கும் வாகனம் வழங்கப்பட உள்ளது என்றார்.