பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, செல்லாண்டி அம்மன் கோவிலில், நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. அதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இடைப்பாடி, கச்சுப்பள்ளியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 7ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அத்திருவிழாவில், நேற்று இரவு, 7:00 மணியளவில், தேரோட்டம் நடந்தது. அதை, கரட்டூர் மணி, ஊர்கவுண்டர்கள் ஆகியோர் துவக்கிவைத்தனர். கச்சுப்பள்ளி, பள்ளிப்பட்டி, கோவலன்காடு, கோரணம்பட்டி, ஆண்டிபாளையம் உள்ளிட்ட, 12 கிராமங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். இதில், 12 கிராம ஊர்கவுண்டர்கள், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.