பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பாறையூர் பகுதியில் கும்பத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. குமாரபாளையம் - இடைப்பாடி சாலை, அய்யம்பாளையம் பகுதியில் பறையூர் உள்ளது. இங்குள்ள, கும்பத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 6:00 மணியளவில், நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 9:00 கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து, விநாயகர் சுவாமி மற்றும் கும்பத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.