இளையான்குடி: தாயமங்கலம்,சுற்றியுள்ள பகுதிகளில்,இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. விவசாயிகள் களையெடுப்பு பணிகளை செய்ய முடியாமல் கவலையில் உள்ளனர். மழை வேண்டி தாயமங்கலம் கிராம மக்கள் முத்துமாரியம்மன் கோயில்,கிராம தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனர்.