பதிவு செய்த நாள்
15
நவ
2016
03:11
திருத்தணி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில், அன்னாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று, ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதே போல், திருத்தணி நந்தி ஆற்றின் கரையில் உள்ள வீரட்டீஸ்வரர், பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர், தாடூர் கடலீஸ்வரர், அகூர் பகுதியில் உள்ள திருவீட்டீஸ்வரர், அருங்குளம் அகத்தீஸ்வரர், நாபளூர் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களில் நேற்று மாலை, 6:00 மணிக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.