உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஷ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. 18 படி தயிர் சாதம், காய்கள், பழங்கள் கொண்டு ஐராவதேஷ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து குத்து விளக்கு பூஜையும் அன்னதானமும் நடந்தது.