ஊட்டி: ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. விழாவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை 5:30 மணிக்கு மேல் மூலவருக்கு அன்னத்தின் மூலம் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. நீலகிரி மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் முன்னேற்ற சங்கத்தினர், சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.
அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் அமைந்துள்ள பாறை முனீஸ்வரர் கோவிலில், 14வது ஆண்டு பவுர்ணமி அன்னாபிஷேக பூஜை நடந்தது.தொழிற்சாலை பொது மேலாளர் மொகபாத்ரா துவக்கி வைத்தார். துணை பொது மேலாளர் ஜெயராமன், இணை பொது மேலாளர் குமார், பாலசுப்ரமணியம், தர்மகர்த்தா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.