பதிவு செய்த நாள்
16
நவ
2016
11:11
சென்னை: தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்துாரில், 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இதன்படி, மலைகோட்டை, வைகை, பொதிகை, மன்னை மற்றும் ராமேஸ்வரம் - புவனேஸ்வர், ராமேஸ்வரம் - மண்டுவாடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், இரு வழி மார்க்கத்திலும், டிச.14 முதல், 2017, பிப்., 9 வரை, மேல்மருவத்துார் நிலையத்தில், மேற்கண்ட ரயில்கள், ஒரு நிமிடம் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.