செம்பாக்கம்: செம்பாக்கம், கால பைரவர் கோவிலில், ஏழாம் ஆண்டு வேள்வி விழா நாளை துவங்குகிறது. திருப்போரூர் ஒன்றியம், செம்பாக்கம் கிராமத்தில் உள்ள கால பைரவர் கோவிலில் ஆண்டுதோறும் மஹா கால அஷ்டபைரவர் வேள்வி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல், 7ம் ஆண்டு வேள்வி விழா நாளை துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், சொற்பொழிவுகள் மற்றும் வேள்விகள் நடைபெறும்.