பதிவு செய்த நாள்
18
நவ
2016 
12:11
 
 திருவள்ளூர் : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், நேற்று, ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர், ஆயில் மில் வெற்றி விநாயகர் கோவில், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வரசித்தி வினாயகர், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகருக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சோழவரம் அடுத்த, நத்தம் காரிய சித்தி கணபதி கோவில், திருவள்ளூர், ஜெயா நகர் வல்லப கணபதி கோவில் ஆகிய இடங்களில் சங்கட நிவாரண ஹோமம் நடந்தது. பின், மகா தீபாராதனை நடந்தது. இதே போல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.