பதிவு செய்த நாள்
18
நவ
2016 
12:11
 
 தம்மம்பட்டி: கெங்கவல்லி தாலுகாவில், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, கொண்டையம்பள்ளி, கூடமலை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில், போதிய பருவ மழை இன்றி, பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், அந்த கிராம விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், மழை வேண்டி, மொடக்குப்பட்டி மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று மாரியம்மனுக்கு, தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர், சிறப்பு யாகங்கள் நடத்தி, அபி?ஷகம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், அம்மனை, மக்கள் வழிபாடு செய்தனர்.