மதுரை, மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்க ஆண்டு விழா நடந்தது. மாவட்ட துணை தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கிளை தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தீர்மானங்கள்: மூன்று பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு தாம்பிராஸ் மூலம் உதவித்தொகை வழங்குவது. 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்களுக்காக வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து திருமணம் நடத்துவது. பிராமண சமுதாயம் மற்றும் பழக்க வழக்கங்களை டிவிக்கள், சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.